தமிழ்நாடு

போலி கால் சென்டர் நடத்தி நூதன மோசடி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி பென்ஸ் சரவணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

சென்னையில், போலி கால் சென்டர் நடத்தி லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி பென்ஸ் சரவணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக தொடர் புகார் வந்ததையடுத்து, செம்பாக்கத்தில் உள்ள கால் சென்டரில் பிப்ரவரி 28-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். போலி கால் சென்டரை நடத்தி வந்த ஜக்ரூதின், இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் சலீம் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலி கால் சென்டர் அமைத்து பொதுமக்களிடம் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அண்ணாசாலையில் பென்ஸ் சரவணன் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் போலி கால்சென்டர் பணிகள் நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பென்ஸ் சரவணன், கூட்டாளிகள் மிதுன் ,குமரன் உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி