பா.ஜ.கவை ஆதரித்து பேசியதற்காகவே பிபின் ராவத் முப்படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். பெங்களூருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடந்ததை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பின்னர் பேசிய முத்தரசன், அரசியல் பேசும் பிபின் ராவத்தை கண்டிக்காமல், மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.