தமிழ்நாடு

பாரதியார் பிறந்த நாளையொட்டி ஜதி ஊர்வலம் - அமைச்சர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு

மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி சென்னையில் ஜதி ஊர்வலம் நடைபெற்றது.

தந்தி டிவி

வானவில் பண்பாட்டு மையம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முகப்பிலிருந்து பாரதி நினைவு இல்லம் வரை ஜதி பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ , மாஃபா பாண்டியராஜன் , பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிடோர் பங்கேற்றனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பேசிய இல.கணேசன், பாரதியாரின் பூரண சுயராஜ்யம் இன்னும் வரவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ விரைவில் உலக தமிழ் மாநாடு நடத்தப்பட உள்ளதாக கூறினார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , உலக பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் தமிழ் இருக்கைக்கு பாரதியாரின் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்