தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது...மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

தந்தி டிவி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடக்கோரி, நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலமனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்க பூர்வாலா மற்றும் நீதிபதி குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பிரதமர் அலுவலக பரிந்துரையின் அடிப்படையில், ஜனாதிபதிதான் பாரத ரத்னா விருது குறித்து முடிவு செய்வார் என மத்திய அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்பட்ட ஒரு நபருக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிமன்றம் பரிந்துரை செய்ய இயலாது என்று தெரிவித்து, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை