தமிழ்நாடு

ரூ.2.5 கோடிக்கு பென்ஸ் கார் வாங்கிய அதிமுக புள்ளிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

தந்தி டிவி

சென்னையில் சொகுசு கார் வாங்கி தருவதாக கூறி இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அபிஷேக் என்ற தொழிலதிபர் அதிமுக இளைஞரணி மாவட்ட செயலாளராகவும் உள்ளார். அவருக்கு அறிமுகமான அரும்பாக்கத்தை சேர்ந்த ரோஷன், ரோஹித் என்ற சகோதரர்கள் குறைந்த விலையில் சொகுசு கார் வாங்கி தருவதாக கூறி அபிஷேக்கிடமிருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் தனது பெயரில் வங்கியில் கடன் பெற்று பென்ஸ் சொகுசு காரை டெல்லியில் உள்ள ஷோரூமில் வாங்கியுள்ளார். சில மாதங்கள் EMI கட்டிய ரோஹித் பின்னர் காரை அபிஷேக்கிடம் ஒப்படைத்துள்ளார். EMI கட்டாததால் வங்கி நிர்வாகம் கேட்க, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிஷேக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ரோஷன், ரோஹித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை