பொறியியல் படிப்பில், கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை படிக்கும் மாணவர்கள், பி.எட், படிப்பதற்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது. அந்த மாணவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, அதன்பின் மற்றொரு தேர்வெழுதி வெற்றி பெற்றால் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அனுமதிப்பது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வின் போது, முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மற்றொரு போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசு, அரசாணை வெளியிட்ட நிலையில், இதுவரை ஒரு தேர்வு கூட நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.