தமிழ்நாடு

பி.இ. படிப்புக்கான கவுன்சிலிங் - அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்

தந்தி டிவி

பொறியியல் படிப்பில் சேருவதற்கு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்து முடிந்து, 685 இடங்கள் நிரம்பி உள்ளன. அதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த பொதுக் கலந்தாய்வு, வெள்ளிக்கிழமை தொடங்கி, செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முதல் கட்ட பொது கலந்தாய்வு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் உள்ள தரவரிசை பட்டியலில் முதலிடம் தொடங்கி, ஆயிரத்து 74-ஆவது இடம் பிடித்த மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்