சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், தெங்குமரஹாடா செல்லும் வனசாலையில் இருவேறு இடங்களில் உள்ள பள்ளங்களில் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய வன கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப்பேருந்துகள், கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வரும் 3 கிராம மக்களும் டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளுக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைத்து, போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.