சேலம் சூரமங்கலம் பகுதியில், சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பிரபு மணிகண்டனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ளதாகவும், மக்களுக்கு சாதாரண வசதிகள் கூட இதுவரை செய்து தரப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.