தமிழ்நாடு

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜின் புதிய வீடியோக்கள் - பெரும் அதிர்ச்சி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக இளம்பெண்களுடன் பார் நாகராஜூம் இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பொள்ளாச்சி அம்மா பேரவை செயலாளராக இருந்தவர், பார் நாகராஜ். பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பார் நாகராஜ், கைது செய்யப்பட்டு அன்றைய தினமே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து பார் நாகராஜை, அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது. பொள்ளாச்சி சம்பவத்தால், பெரும் கொந்தளிப்பில் உள்ள அப்பகுதி மக்கள், பார் நாகராஜூக்கு சொந்தமான, மது குடிப்பகத்தை நேற்று அடித்து நொறுக்கினர்.

இந்தநிலையில், பார் நாகராஜும் இளம் பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ள நிலையில், வழக்கில் இந்த வீடியோ புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு, பார் நாகராஜ் மீதும் பாலியல் வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நான்கு வீடியோக்கள் மட்டும் இருந்ததாக மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் தெரிவித்த நிலையில், அதற்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி