காதுகேளாதோருக்கான தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியா ஆனந்த், ஐசரி கணேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
விழாவின் போது எதிர்பாராத விதமாக அலங்கார விளக்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக சிறிய தீ விபத்து ஏற்பட்டது . பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே அந்த தீயை அணைத்தனர்.