அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சுயநலம் இல்லாமல் அனைவரும் சேவை புரியும் போது நாடு முன்னேற்றம் அடையும் என்றார். இறுதியாக தமிழில் பேசிய ஆளுநர், தாம் தமிழை விரும்புவதாக தெரிவித்தார்.