இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான விளம்பர பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை அவரை தேடி வந்த நிலையில், திடீர் திருப்பமாக சுபஸ்ரீ உயிரிழந்த சாலையில் உள்ள மருத்துவமனையில் அவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது இ.பி.கோ.304(ஏ) -கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.