தமிழ்நாடு

"ரூ.12.6 கோடி கட்டினால் ரூ.500 கோடி..."- அலேக்கா ஆட்டைய போட்ட மர்ம கும்பல்.!-வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது!

தந்தி டிவி

கோவை தொழிலதிபருக்கு 500 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூபாய் 12 கோடியே 60 லட்சம் மோசடி செய்த புகாரில் தனியார் வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜன் பாபு. இவர், தனது 500 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று, சென்னை அண்ணா நகர் மேற்கை சேர்ந்த சரவணனை அணுகியுள்ளார். அப்போது, வெளிநாட்டில் இருந்து தனக்கு வரும் பணத்தில் இருந்து 500 கோடி ரூபாயை கடனாக கொடுப்பதாகவும் சரவணன் கூறியுள்ளார். கமிஷனாக 12 கோடியே 60 லட்சம் ரூபாயை, சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி மேலாளர் பாலாஜியிடம் கொடுத்தால், ஒரு மணி நேரத்தில் 500 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்றும் கூறியுள்ளார். அதை நம்பிய ராஜன் பாபு, 12 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்துள்ளார். ஆனால், கடன் தொகை வராத‌தால், சரவணனை தொடர்பு கொண்ட போது, முறையாக பதிலளிக்காத‌தால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார். இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ராஜன் பாபு புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கி மேலாளர் பாலாஜி உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சரவணனை தேடி வருகின்றனர். வேறு யாரையாவது இதே போல் ஏமாற்றியுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்