தமிழ்நாடு

"வங்கிகளில் பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ" - வெளியான புதிய உத்தரவு

தந்தி டிவி

பண நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், வங்கிகளில் பணம் பெரிய தொகையை எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பண நடமாட்டத்தை வங்கி அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்த பணம் எடுத்துச்சென்றாலும், உரிய ஆவணம் இருக்கிறதா என சரிபார்த்து அனுமதிக்க வேண்டும் என்ற அவர், ஐ.டி., அதிகாரிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்