சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சசிகலா சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4-வது நாளாக செயற்கை சுவாசத்தின் உதவியின்றி அவர் சுவாசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா வழிமுறைபடி அவர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.