தமிழ்நாடு

டிக் டொக் செயலியை தடை செய்ய சட்டப்பேரவையில் கோரிக்கை : நடைமுறையில் உள்ள மற்ற செயலிகளின் நிலை என்ன?

சமீப காலத்தில் டிக் டொக் என்ற செயலி மிகப் பிரபலமாக மாறி விட்டது.

தந்தி டிவி

* இது ஒரு ஆன்ட்ராய்டு செயலி... கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே மியூசிக்கலி என்ற பெயரில் இயங்கி வந்த இந்த செயலியானது டிக் டொக் என பெயர் மாற்றப்பட்டதும், மிகப் பிரபலமடைந்து விட்டது.

* சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது இந்த செயலி. மிகுந்த பொழுது போக்கை தரக்கூடியதாக கருதப்பட்ட இந்த செயலியை சிலர் ஆபாசமாகவும், கலாச்சாரத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவதாக மெல்ல புகார்கள் எழத் துவங்கின.

* இளைஞர்கள், இளம்பெண்களிடம் இந்த செயலி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அதிக நேரத்தை இதில் செலவிட தொடங்கினர். ஆதரவு ஒரு பக்கம் பெருகிய நிலையில் எதிர்ப்பும் ஒரு புறம் வேகமாக பரவியது.

* தற்போது இந்த செயலியை தடை செய்ய வேண்டுமென சட்டப்பேரவை வரை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தடை செய்தால் மட்டும் இதற்கு தீர்வு கிடைத்து விடுமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

* காரணம், இதேபோன்ற ஸ்மியூல், டப்மாஷ், லைக் போன்ற பல செயலிகள், நடைமுறையில் இருக்கின்றன. வளர்ந்து வரும் டெக்னாலஜியில் இதுபோன்ற செயலிகளை தடை செய்வதால் மாற்றங்களை கொண்டு வர முடியுமா? என்ற கேள்வியும் இங்கே பிரதானமாக நம் முன் வைக்கப்படுகிறது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்