தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு - சுகேஷ் சந்திரசேகருக்கு இடைக்கால ஜாமீன்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது.

தந்தி டிவி

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம்

2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவற்றில் 4 பேர் மீதான குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்கு விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்