தமிழ்நாடு

வேலூரை உலுக்கிய குழந்தை கடத்தல்.. 8 மணி நேரம் 500போலீஸ் - கடத்திய காதல் ஜோடிக்கு சரியான செக்

தந்தி டிவி

வேலூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிஞ்சு குழந்தையை, 4 தனிப்படைகள் அமைத்து 8 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சூரியகலா. கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிரசவ சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். தொடர்ந்து கருத்தடை செய்வதற்காக சிகிச்சையில் இருந்த சூரியகலாவிற்கு, மர்மபெண் ஒருவர், மயக்கம் கலந்த உணவுப்பொருளை கொடுத்து குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், 4 தனிப்படைகள் அமைத்து குழந்தையை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். இதில், மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவியை ஆராயும் போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர், குழந்தையை கடத்தி செல்வது தெரியவர, மருத்துவமனையே பரபரப்பானது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்