Live Sathyamangalam 
தமிழ்நாடு

தரிசு நிலத்தில் இறந்து கிடந்த குட்டி யானை - பொதுமக்கள் அதிர்ச்சி

யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை

thanthitv

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் தரிசு நிலத்தில் குட்டி யானை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலை கிராமங்களை ஒட்டி உள்ள தரிசு நிலங்களில் பகல் நேரத்தில் நடமாடுகின்றன.

வனத்துறையினரும் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாளவாடி மலை பகுதியில் உள்ள அருளவாடி கிராமம் அருகே தரிசு நிலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் அப்பகுதியில் ஒரு குட்டி யானை இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் குட்டி யானை இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து வருகின்றனர்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்