மார்கழி மாத திருவிளக்கு பூஜை : கையில் விளக்குகளை ஏந்தி பெண்கள் ஊர்வலம்
பொன்னேரி அருகே திருவேங்கடபுரம் ஸ்ரீகருமாரியம்மன் ஆலயத்தில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 38 ஆவது ஆண்டாக நடைபெறும் திருவிளக்கு பூஜையில் திருவேங்கடபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கையில் விளக்குகளை ஏந்தி, பொன்னியம்மன் ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர். மலர் அலங்கார வாகனத்தில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியின்போது நடைபெற்ற வானவேடிக்கை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.