பெரம்பலூரில் டிஎஸ்பியிடம் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. பயிர்க்கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கலைந்து போகுமாறு கூறியதால் அய்யாக்கண்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.