தமிழ்நாடு

ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை..சென்னை திரும்புவோர்களே..! உங்களுக்காக ஒரு அப்டேட்

தந்தி டிவி

சரஸ்வதி பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள், சொந்த ஊர் செல்ல தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்தது. இந்நிலையில் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்ப, மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24-ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், 25-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மீண்டும் அதேநாள் சென்னை எழும்பூரில் இருந்து, காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இதில் முதலாம் வகுப்பு படுக்கை வசதி, ஏசி மற்றும் சாதாரண சேர் கார், சாதாரண படுக்கை வசதி உள்ளிட்ட 21 பெட்டிகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்