தமிழ்நாடு

ஊட்டி மலை ரயிலுக்கு ஆயுத பூஜை... 100 ஆண்டு வரலாற்றை தாங்கி நிற்கும் இன்ஜினுக்கு பூஜை செய்த ஊழியர்கள்

ஊட்டி மலை ரயிலுக்கு ஆயுத பூஜை... 100 ஆண்டு வரலாற்றை தாங்கி நிற்கும் இன்ஜினுக்கு பூஜை செய்த ஊழியர்கள்

thanthitv

ஊட்டி மலை ரயிலுக்கு ஆயுத பூஜை... 100 ஆண்டு வரலாற்றை தாங்கி நிற்கும் இன்ஜினுக்கு பூஜை செய்த ஊழியர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூரில், நூற்றாண்டு பழமையான மலை ரயில் என்ஜின் பணிமனையில் ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு, பணிமனையில் உள்ள நீராவி என்ஜின்கள், டீசல் என்ஜின்கள் மற்றும் மேட்டுப்பாளையம்–ஊட்டி மலை ரயில் பாதையைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் டிராலிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. தொடர்ந்து, என்ஜின்களுக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, ஊழியர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆங்கிலேயர் காலம் முதல் ஆயுத பூஜையின்போது மலை ரயில் என்ஜின்களுக்குப் பூஜை செய்து வருவதாகப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | Sewage Cleaners | `இனி மனிதர்கள் இறங்க தேவையில்லை..' - CM விஜய் அதிரடி உத்தரவு

Chennai Rain Alert மீண்டும் Red Alert சூழல்? போனமுறை போல் இல்லாமல் `U Trun’ போட்டு வரும் சுழற்சி

Marina Beach| மெரினாவில்.. அதிரடி அறிவிப்பு

TN Rain Alert சென்னை உட்பட 14 மாவட்டத்துக்கு அலர்ட் - திடீர் போக்கு காட்டும் இயற்கை

Minister Nirmalkumar | "ஒரே வருஷத்தில் முடியாது.." - டைரக்டாக சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்