Mackerel Fish | Thiruvallur | வலைகளில் அயிலா மீன் மழை - மீன் பிரியர்களே வாங்க ரெடி #thiruvallur #mackerelfish #fishsale #thanthitv டன் கணக்கில் அயிலா மீன்கள் வரத்து - மீனவர்கள் மகிழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் டன் கணக்கில் கானாங்கெத்தை மீன்கள் கரை சேர்ந்துள்ளதால் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலைகளில் அயிலா எனப்படும் கானாங்கெத்தை மீன்கள் அதிகளவில் சிக்கியுள்ளன. டன் கணக்கில் கரைக்கு கொண்டு வரப்பட்ட மீன்களை வியாபாரிகள் ஆர்வமுடன் கொள்முதல் செய்து வருகின்றனர். கரைக்கு வந்த மீன்கள் ஐஸ் பெட்டிகளில் பதப்படுத்தப்பட்டு சென்னை உள்ளிட்ட மீன் சந்தைகளுக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் நேரடியாக மீன் சந்தைகளுக்கு வந்து கானாங்கெத்தை மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன்களின் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ கானாங்கெத்தை மீன் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.