* மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தனர். இந்த குழுவில் 3 வழக்கறிஞர்கள், கிராம மக்கள் 16 பேரும் சேர்க்கப்பட்டனர்.
* இதையடுத்து அந்த ஒருங்கிணைப்பு குழு கடந்த 15ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டினை நடத்தி முடித்தது.
* விழா ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தியது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்தனர்.
* அந்த அறிக்கையுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக விழா ஒருங்கிணைப்பு குழுவால் அச்சடிக்கப்பட்ட ரசீது புத்தகம், வரவு - செலவு கணக்குகள், ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது.
* இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த ஒய்வு பெற்ற நீதிபதி ராகவனுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், குழு உறுப்பினர்களான வழக்கறிஞர்கள் திலீப் குமார், சரவணன், ஆனந்த் சந்திரசேகர் ஆகியோருக்கு தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் மதுரை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
* ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்தி முடித்த குழுவினருக்கும், ஒத்துழைப்பு தந்த மதுரை மாநகராட்சி ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பாராட்டுக்களையும் நீதிபதிகள் தெரிவித்தனர்.