தமிழ்நாடு

ஆட்டோ ரேஸில் மெக்கானிக் உயிரிப்பு : 6 பேர் கைது

சென்னையில், தாம்பரம் - புழல் புறவழிச்சாலையில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்டு மெக்கானிக் பலியான விவகாரத்தில், 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

வில்லிவாக்கம், திருவேங்கடம் தெருவை சேர்ந்த பிரபாகர்,விபத்தில் அடிபட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தாம்பரம் - புழல் புறவழிச்சாலையில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்டபோது, பிரபாகர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, ரேசில் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ரேசின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து, பூந்தண்டலத்தைச் சேர்ந்த மதார்சா, கிண்டியை சேர்ந்த தனசேகர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 ஆட்டோக்கள், ஒரு கார், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், உயிரிழந்த பிரபாகர், ரேஸ் ஆட்டோக்களை தயார் செய்வதிலும், ரேசில் பங்கு பெறுவதிலும் கைதேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை

PM Modi in Andhra | மூவேந்தர்களாக பிரமாண்ட பவனி - ஒரே வேனில் மோடி, சந்திரபாபு, பவன் கல்யாண்