திருவண்ணாமலையில், இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனந்தன், பாஸ்கர் ஆகிய இருவரும் திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுவது வழக்கம். ஆட்டோ ஓட்டுவதில் இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு, ஆனந்தனை, பாஸ்கர் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த ஆனந்தன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாஸ்கர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.