தமிழ்நாடு

ஆட்டோ ஒட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை...

பட்டபகலில் சிவகங்கை சிபி காலனியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் மர்ம கும்பலால், ஒடஒட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

தந்தி டிவி
சிவகங்கை சிபி காலனியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் கண்ணன் என்பவர் பிற்பகல் 12 மணி அளவில் திருப்பத்தூர் சாலையில் உள்ள இலந்தன்குடிபட்டி கண்மாய் அருகே ஆட்டோவில் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஆட்டோ டிரைவர் கண்ணனை வெட்ட முயன்றுள்ளனர். சுதாரித்துக் கொண்ட கண்ணன் கண்மாய்க்குள் இறங்கி தப்பி ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் கண்ணனை தொடர்ந்து விரட்டிச் சென்று தலை மற்றும் இடது கைகளில் வெட்டி விட்டு தப்பியுள்ளது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த சிவகங்கை போலீசார், கண்மாய்க்குள் கிடந்த கண்ணன் உடலை கைபற்றி , உடற்கூறு ஆய்​வுக்காக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் இளைஞர் ஒருவர், மர்ம கும்பலால், ஒடஒட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு