தமிழ்நாடு

சாதுர்ய நடிப்பால் எஸ்கேப் ஆன பலே திருடன்...

சென்னையில் ஆடி காரை திருடிய காவலாளி, ஆறு நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில் எஸ்கேப் ஆகியுள்ளான்...

தந்தி டிவி

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையை சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் பரத்குமார்... இவரது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சாகர்குமார் என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கோடை விடுமுறைக்காக, பரத்குமார் தனது குழந்தைகளுடன் அமெரிக்கா சென்ற நிலையில், சமயம்பார்த்து காத்திருந்த காவலாளி சாகர்குமார், கடந்த சனிக்கிழமை அன்று இரவு வீட்டில் இருந்த ஆடி காரை திருடி சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பரத்குமாரின் தம்பி ஆகாஷ் குமார், கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த ஆறு நாட்களாக , பல இடங்களில் தேடியும், ஆடி கார் திருடி சென்ற சாகர்குமார் குறித்து எந்த தகவலும் கிடைக்காத‌தால் கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது... குடி போதையில் ஒருவர் ஓட்டி வந்த ஆடி காரை பிடித்து வைத்துள்ளதாக, எழும்பூர் காவல்நிலையத்தில் இருந்து, கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் சென்றது. திருடன் சிக்கிவிட்டான் என்ற மகிழ்ச்சியில் சென்ற கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு மற்றொரு டுவிஸ்ட் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளான் அந்த பலே திருடன்.

எழும்பூர் போலீசாரிடம் மதுபோதையில் மாட்டிகொண்ட சாகர்குமார், போதையில் இருந்தாலும், போலீசாரை பார்த்தவுடன் சாதுர்ய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை கார் உரிமையாளர் போல காட்டிகொண்ட சாகர்குமார், கார் நிற்கட்டும், நான் காலையில் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பல லட்சம் மதிப்புள்ள காரை நிறுத்திவிட்டு செல்கிறார், எப்படியும் வந்துவிடுவார் என்று நம்பிய எழும்பூர் போலீசாருக்கு, அந்த காரை சாகர்குமார் திருடி வந்த‌து தெரிந்திருக்கவில்லை. கீழ்ப்பாக்கம் போலீசார் தகவல்களை கூறிய பிறகே, தாங்கள் திருடனை கோட்டை விட்டுவிட்டோம் என்பது எழும்பூர் போலீசாருக்கு புரிந்துள்ளது. கார் திரும்ப கிடைத்துள்ளது, பரத்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதலை அளித்தாலும், சிக்கிய திருடனை கைவிட்ட போலீசாருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு