தமிழ்நாடு

Chennai | ரயில் பயணிகள் கவனத்திற்கு.. சென்னையில் நாளை 8 ரயில்கள் ரத்து

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. சென்னையில் நாளை 8 ரயில்கள் ரத்து

thanthitv

Chennai | ரயில் பயணிகள் கவனத்திற்கு.. சென்னையில் நாளை 8 ரயில்கள் ரத்து #chennai #train #thanthitv சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 8 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது... சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் இன்று முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை கடற்கரையிலிருந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தாம்பரம் செல்லும் 5 ரயில்களும், தாம்பரத்திலிருந்து கடற்கரை வரும் 3 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 4, 6, 7 ஆகிய தேதிகளில் கடற்கரையிலிருந்து காலை மற்றும் இரவு புறப்பட்டு தாம்பரம் செல்லும் 4 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், நாளை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் ஒரு ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமால்பூர் மற்றும் செங்கல்பட்டிலிருந்து கடற்கரை நோக்கி புறப்படும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BJP Annamalai | PM Modi | "அண்ணாமலை டீமே முழுசா இல்ல" - பகீர் கிளப்பிய தாமோதரன் பிரகாஷ்

BJP | Modi | Annamalai | ``அமித்ஷாவுக்கு பதில் வந்த மோடி’’ - உள்ளே அண்ணாமலை.. என்ன நடந்தது?

PM Modi | BJP | நிறைவு பெற்றது கூட்டம்.. பிரதமர் எடுத்து வைத்த லிஸ்ட்?

TVK Vijay | "நான் தன்னந்தனி ஆளு" - பாட்டு பாடி விஜய் Thanks சொன்னவுடன் மாறிய களம்

TVK Vijay | கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தில் `விஜய்’ - வாகனத்தை நிறுத்தி தொண்டர்கள் செய்த செயல்