தமிழ்நாடு

சிறை கைதிக்கு கஞ்சா கொடுக்க முயற்சி...சிறை காவலரிடம் சிக்கிக்கொண்ட நண்பர்கள்

தந்தி டிவி

சென்னை புழல் சிறையில் கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவத்தில், கைதி, பார்வையாளர்கள் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேஷ் என்பவரை சந்திக்க, அவரது நண்பர்கள் 3 பேர் சிறைக்கு வந்தனர். அப்போது, பப்பிள்கம்மில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை ராஜேஷிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர் கையும் களவுமாக பிடித்த நிலையில், கைதி ராஜேஷ், நண்பர்களான கார்த்திக் ராஜா, சூரியமூர்த்தி, சிலம்பரசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Nellai | Pocso Act | சிறுவனிடம் அசிங்கமாக அத்துமீறல்.. பெண் காவலர் மீது பாய்ந்த போக்சோ

Ration Shop Latest News| ரேஷன் கடைகளில் செய்த மாற்றம்.. அரசுக்கு மிச்சமான ரூ.187 கோடி

Dharapuram Byelection| விடிந்தால் தாராபுரத்தில் இடைத்தேர்தல் - ஓபன் ஆனது ஸ்ட்ராங் ரூம்

Dharapuram Maduranthakam By Election |முழுவீச்சில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பணிகள்

Vetri Payanam Thittam | "எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்