தமிழ்நாடு

பெண் கவுன்சிலருக்கு வீடு புகுந்து வெட்டு..தடுக்க வந்த கணவர்,மகனுக்கு நேர்ந்த சோகம்..

தந்தி டிவி

கோவை, மலுமிச்சம்பட்டியில் பெண் கவுன்சிலரின் குடும்பத்தை மர்ம குமபல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மலுமிச்சம்பட்டி அவை நகரை சேர்ந்தவர் சித்ரா. 3 ஆவது வார்டு கவுன்சிலரான இவரை, முககவசம் அணிந்து வந்த மர்மகும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்போது, வீட்டினுல் இருந்த சித்ராவின் கணவர் ரவிக்குமார் மற்றும் மகன் மோகனையும் அரிவாளால் தாக்கி தப்பி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், படுகாயமடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், 6 மாத காலத்திற்கு முன்னதாக மூன்றரை சென்ட் நிலத்தை சித்ரா வாங்கியதாகவும், அதற்கான பணத்தை இடைத்தரகரிடம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜா என்பவர் 4 பேருடன் சேர்ந்து கவுன்சிலரின் குடும்பத்தை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது தெரியவர, ஐந்து பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்