தமிழ்நாடு

ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் - 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை திட்டி அவரது அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை திட்டி அவரது அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த சீனிவாசன் உள்ளார். அவர் ஓம்சக்தி நகர் ரேஷன் கடையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக

2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை நேரில் பார்வையிட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த திமுகவை சேர்ந்த பரமேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஊராட்சி தலைவர் சீனிவாசனை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் சீனிவாசனின் அலுவலகத்திற்கு சென்ற 10க்கும் மேற்பட்ட நபர்கள், அவரையும், உடன் இருந்தவர்களையும் சரமாரியாக தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் பரமேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை