காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணுக்கு, தனியார் பேருந்து உரிமையாளர் பாண்டிதுரை என்பவர் கடந்த 3 மாதமாக பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணியில் இருந்த பெண்ணை பாண்டித்துரை தொலைபேசியில் அழைத்து தவறாக பேசியுள்ளார். இதை மருந்தகத்தின் உரிமையாளர் ரவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டிதுரை அடியாட்களுடன் வந்து மருந்தகத்தை சூறையாடினார். மேலும் கடையில் இருந்த பெண்ணையும், கடை உரிமையாளர் ரவியையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.