தமிழ்நாடு

குடிபோதையில் சுற்றி திரிந்த கொள்ளையன் - சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

திருச்சியில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் , சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

கடந்த 20 ஆம் தேதி. திருச்சி பாலக்கரையில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப சென்ற ஊழியர்களை திசை திருப்பி, 16 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், பெரம்பலூரில் கைது செய்யப்பட்டுள்ளான்.

பெரம்பலூர் பகுதியில், குடிபோதையில் ஆட்டோவில் சுற்றித் திரிந்த அவனது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஸ்டீபன் என்பதும் , திருச்சி வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவனிடமிருந்து 16 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனிப்படை போலீசார் கொள்ளையனுக்கு வலை விரித்த நிலையில், நேரடியாக வந்து சிக்கிய அவனை, விசாரிப்பதற்கான போலீசார் திருச்சி கொண்டு சென்றுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்