துணை நடிகர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக இயக்குனர் அட்லீ மீது, துணை நடிகை ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் விஜய் நடித்து வரும் புதிய படத்தில், துணை நடிகை கிருஷ்ணதேவியும், நடித்து வருகிறார். இந்நிலையில்,
படப்பிடிப்பு தளத்தில், தரக்குறைவாக நடத்தியதோடு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்று அவர் குற்றம் சாட்டி உள்ளார். இயக்குனர் அட்லீ கண்ணெதிரிலேயே உதவி இயக்குனர்கள், தம்மை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேற்றியதாகவும், கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, கிருஷ்ணவேணி தெரிவித்தார்.