தமிழ்நாடு

கதவில் காத்திருந்த எமன்... அடுத்தடுத்து பறிக்கப்பட்ட தம்பி, அக்கா உயிர் -ஊரே கதறி அழுத காட்சி

தந்தி டிவி

திண்டுக்கல்லில், வீட்டிற்குள் ஏற்பட்ட மின்கசிவால் சிறுவனும், அவருடைய சகோதரியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள மம்மானியூரில் வசித்து வரும் தம்பதி சுந்தரம் - நல்லம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் என ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக தம்பதியின் வீட்டிற்குள் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மின் கசிவை சரி செய்யும் படி மின்சார ஊழியர்களை தம்பதி அழைத்த நிலையில், வீட்டிற்கான மின் இணைப்பை துண்டித்து விட்டு காத்திருக்கும் படி மின் ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குமார், திடீரென வீட்டின் தகர கதவை தொட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் சகோதரி அழகு மீனா, தம்பியை காப்பாற்றச் சென்ற நிலையில், அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள், தங்களின் பகுதி முழுமைக்கான மின் இணைப்பை துண்டித்து விட்டு, இருவரின் உடல்களுக்கு முன்பும் அமர்ந்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்