தமிழ்நாடு

கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில்

thanthitv

கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வந்த மாணவன் அகிலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளித் தலைமையாசிரியர் அருண் குமார் மற்றும் வகுப்பு ஆசிரியர் விஜய குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 6-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

காவல்துறையின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், வழக்கை சிபி-சிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

இந்நிலையில், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்ட டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், அசல் ஆவணங்களை உடனடியாக சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாணவன் அகிலனின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

CM Vijay| Aadhav Arjuna|பிரமாண்டத்தை தயார் செய்யும் அமைச்சர் ஆதவ் - CM விஜய்யே நேரடியாக இறங்குகிறார்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த ட்விஸ்ட்.. CBCID-யின் நெக்ஸ்ட் பிளான் இதுதான்

GoldRate | Todaygoldrate| Gold கியரை மாற்றி எகிறும் தங்கம் கிராமுக்கு இவ்வளவா ?

TN Govt | தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு - செம குட்நியூஸ்

Breaking | maduraiboy | மாயமான மதுரை சிறுவன் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம் வெளியான ஷாக்கிங் அப்டேட்