திருப்பூர் குமரன் சாலையில் கிளிஜோசியராக இருந்தவர் ரமேஷ் என்னும் குமார். இன்று அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் ரமேஷை பயங்கர ஆயுதம் கொண்டு தாக்கினார்.
கீழே விழுந்த ரமேஷை பலமுறை அரிவாளால் வெட்டிய அந்த மர்மநபர், நோட்டீஸ் ஒன்றையும் விநியோகித்தார். அதில் கிளி ஜோசியர் ரமேஷ், பெண்களை வசியம் செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். ரமேஷின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதால் கொலை செய்ததாக அவர் கூறியபடி சென்றார். நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.