தமிழ்நாடு

Tiruvannamalai | ஒரு கிலோவே இவ்வளவா? - தி.மலையில் விண்ணைத் தொட்ட பூக்களின் விலை

ஒரு கிலோவே இவ்வளவா? - தி.மலையில் விண்ணைத் தொட்ட பூக்களின் விலை

thanthitv

#Tiruvannamalai #Flower #FlowersRate #ThanthiTV

Tiruvannamalai | ஒரு கிலோவே இவ்வளவா? - தி.மலையில் விண்ணைத் தொட்ட பூக்களின் விலை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, திருவண்ணாமலை பூ மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொய்த்ததால் பூ விளைச்சல் குறைந்துள்ளதாகவும், இதனால் மல்லிகை மற்றும் முல்லை பூக்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதன்படி, ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரம் ரூபாய்க்கும், முல்லைப்பூ 700 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சாமந்திப்பூக்கள் வரத்து அதிகரித்ததால், அவை கிலோ 150 முதல் 300 ரூபாய் வரை விற்பனையானது. பண்டிகையை முன்னிட்டு பூ மாலைகள், வாழை மரங்கள், மா இலை தோரணங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பண்டிகைக் கால விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தாலும், மழையின்மையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் பூ விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

CM Vijay | TN Govt | சட்டம் ஒழுங்கு ஆர்டிஐ விலக்கு அரசாணை ரத்து

Asian Para Games | India Won Gold | இந்தியாவுக்கே பெருமை.. வரலாற்று சாதனை படைத்த சிங்கப்பெண்

CM Vijay | TN Govt | அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற இது கட்டாயம் - தமிழக அரசு அரசாணை

TN Rains| இடி,மின்னலுடன் மீண்டும் வருகிறது - வந்தது எச்சரிக்கை

Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?