தமிழ்நாடு

சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

சட்டப்பேரவை கூட்டத் தொடர், 28-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.

தந்தி டிவி

சட்டப்பேரவை கூட்டத் தொடர், 28-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், பங்கேற்கின்றனர். சட்டசபை கூட்டத் தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கையின்போது, துறை சார்ந்து எந்தெந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவது?, எவ்வளவு நிதி ஒதுக்குவது? என்பது குறித்தும், புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு, சட்டசபை கூட்டத் தொடரில் அவை அறிவிப்புகளாக வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்