தமிழ்நாடு

நெருங்கும் பொங்கல்.. ஏமாற்றத்தில் ரயில் பயணிகள் | Pongal

தந்தி டிவி

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன...பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன் பதிவு கடந்த 90 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்த நிலையில், தட்கலில் டிக்கெட் பெற திட்டமிட்டு ஏராளமானோர் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்... நாளை வெள்ளிக்கிழமை அலுவல் பணி முடித்து சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்தன... தென் மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, அனந்தபுரி உட்பட அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் தீர்ந்த நிலையில், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்... தெற்கு ரயில்வேயின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் முழுமையாக நிறைவடைந்த ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்