மங்கல வாத்தியங்கள் விண்ணை பிளக்க.. சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் - திரண்ட பக்தர்கள் #Kanchipuram #SubramanyaSwamiTemple #thanthitv காஞ்சிபுரம் மாவட்டம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. அந்த காட்சிகளை பார்க்கலாம்... இன்று அதிகாலை யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.