எளமணம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம், 9 ஆண்டுகளுக்கு முன்பு சிதலமடைந்தது. இதனால், தற்காலிகமாக அங்குள்ள நாடக மேடை, அங்கன்வாடி மையமாக மாற்றப்பட்டது. ஆனால், அதுவே நிரந்தர அங்கன்வாடி மையமாக பின்பு மாறிவிட்டது.
இங்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதால் பழைய இடத்திலேயே புதிய கட்டிடம் கட்டி அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.