தமிழ்நாடு

வேகத் தடுப்பில் மோதிய தலைமைக் காவலர் வாகனம் : காதில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலர் சாம் பிரேம் தடுப்புக் கம்பியில் மோதி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலர் சாம் பிரேம் தடுப்புக் கம்பியில் மோதி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ரெட்டியாப்பட்டி காவல் நிலைய, தலைமை காவலரான பொம்மக்கோட்டையைச் சேர்ந்த அவர், முத்துராமலிங்கபுரம் பகுதியில், வேகத் தடுப்பில் மோதி கீழே விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரைமீட்டு அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், காதில் ரத்தம் வழிந்த நிலையில், முன்னதாகவே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பணி நிமித்தமாக சென்றபோது, இந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்