தமிழ்நாடு

"ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை"

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பலோ மருத்துவமனை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, அப்பலோ தரப்பு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து அப்பலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு , ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், மருத்துவர்கள் அடங்கிய விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்ற அப்பலோவின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்