தமிழ்நாடு

சிக்கிய முக்கிய தடயம்.. `மாஸ்டர் மைண்ட்' சம்போ செந்திலை பிடிக்க போலீஸ் எடுத்த அதிரடி முடிவு

தந்தி டிவி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் உட்பட 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோர் இருப்பதாக போலீசார் தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரவுடி சம்போ செந்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார். தற்போது அவர் எப்படி இருப்பார் என்பதே போலீசாருக்கு தெரியாத நிலையில், சிறையில் இருக்கக்கூடிய அவரது கூட்டாளி ஈசாவிடன் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு எண்களில் இருந்து கடந்த ஒரு ஆண்டாக சம்போ செந்தில் பேசியது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த விவரங்களை வைத்து தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடியுள்ளனர். இந்த எண்கள் எங்கு இருந்து அழைக்கப்பட்டது எந்த ஐ.பி. முகவரிலிருந்து அழைக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டு இருக்கின்றனர். இந்த விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் வழக்கில் பல முன்னேற்றங்கள் வரக்கூடும் என்கின்றனர் தனிப்படை போலீசார்...

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு