தமிழ்நாடு

தந்தி டிவியால் பிறந்த வழி.. மாணவர்கள் மகிழ்ச்சி

தந்தி டிவி

தந்தி டிவி செய்தி எதிரொலியாக அரியலூர் மாவட்டம் மாளிகைமேட்டில் பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அரசால் பாதை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

மாளிகைமேட்டில் வசித்துவரும் கூலித்தொழிலாளி தம்பதியர் பாலசுப்பிரமணியன்- கவுசல்யா... இவர்களின் மூன்று குழந்தைகளும் அருகில் உள்ள உட்கோட்டை அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் வீட்டிலிருந்து மெயின் ரோட்டுக்கு வரக்கூடிய பொதுப்பாதை, ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு, முட்புதர்கள் மண்டி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் பள்ளி செல்வதற்கும் அன்றாட பணிகளில் ஈடுபடுவதற்கும் பாதை இல்லாமல் இவர்கள் அவதி அடைந்தனர். இது தொடர்பான செய்தி தந்தி டிவியில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுத்தம் செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசுக்கும் தந்தி டிவிக்கும் அந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அச்சமின்றி தற்போது பள்ளிக்கு செல்ல முடிவதாக மகிழ்ச்சியுடன் மாணவர்கள் கூறியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்