காட்டு தீயாய் பரவிய தகவல்... பீதியில் உறைந்த மக்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னேரியில் சடலம் மிதப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆமணக்கணந்தோண்டி பகுதியை சேர்ந்த சிலர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, சடலம் போன்று மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்பேரில் போலீசார் ஏரியில் சோதனை செய்தபோது, சடலத்திற்கு பதிலாக ஆட்டின் பனிக்குடம் மிதந்தது தெரியவந்தது.